பயங்கரவாத எதிர்ப்பு சட்ட மூலத்தை எதிர்த்து வவுனியாவில் ஆர்ப்பாட்டம்

IMG 20230420 101853 பயங்கரவாத எதிர்ப்பு சட்ட மூலத்தை எதிர்த்து வவுனியாவில் ஆர்ப்பாட்டம்

பயங்கரவாத எதிர்ப்பு சட்ட மூலத்தை எதிர்த்து வவுனியாவில் கவனயீர்ப்பு  ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று  முன்னெடுக்கப்பட்டது.

வடக்கு – கிழக்கு பெண்கள் கூட்டால் வவுனியா பத்தினியார் மகிழங்குளம், முனியப்பர் ஆலயத்திற்கு முன்பாக  குறித்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றிருந்தது.

இதன்போது ‘சிறுபான்மையினரை அடக்குவதற்காக புதிய சட்டத்தை உருவாக்காதீர், இந்த நாட்டில் சுதந்திரமாக வாழ்வதற்கு வழி விடுங்கள், இலங்கை அரசே பயங்கரவாத தடைச்சட்டத்தினை நீக்கி பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை உருவாக்கதே’ போன்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறும், கோசங்களை எழுப்பியவாறும் போராட்டத்தில் ஈடுபட்டிருந்ததுடன், அரசாங்கத்திற்கு வழங்குவதற்கான மகஜரும் வாசிக்கப்பட்டது.