பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைதானோருக்கு தனியான தடுப்புக்காவல் நிலையம்!

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களைத் தடுத்துவைத்திருப்பதற்கு தனியான தடுப்பு நிலையம் ஒன்று பயன்படுத்தப்படும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ அறிவித்திருக்கின்றார்.

கொழும்பு -5, கிருலப்பனையில் அமைந்திருக்கும் பயங்கரவாத ஒழிப்பு மற்றும் விசாரணைப் பிரிவு இதற்கான தடுப்பு நிலையமாகப் பயன்படுத்தப்படவுள்ளது.

ஜனாதிபதி கோதாபய ராஜபக்‌ஷவால் வெளியிடப்பட்ட ஜூன் 4 ஆம் திகதியிடப்பட்ட விஷேட வர்த்தமானி மூலமாக இது குறித்த பிரகடனம் வெளியிடப்பட்டுள்ளது.

Leave a Reply