பண்டாரவன்னியன் மறுமலர்ச்சி மன்றத்தால் மாணவர்கள் கௌரவிப்பு நிகழ்வு

557 Views

மாவீரன் பண்டாரவன்னியன் மறுமலர்ச்சி மன்றத்தால் வவுனியா மாவட்டத்தில் உயர்தர பரீட்சையில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவர்களிற்கான கொளரவிப்பு நிகழ்வு பெப்ரவரி 29ம் திகதி இடம்பெறவுள்ளது.

மன்றத்தின் தலைவர் மா.கதிர்காமராஜா தலைமையில் வவுனியா சுத்தானந்தா இந்து இளைஞர் சங்க மண்டபத்தில் காலை 9.00 மணிக்கு இடம்பெறவுள்ளது. இதன் போது வவுனியா மாவட்டத்தில் உயர்தர பரீட்சையில் புதிய மற்றும் பழைய பாடத்தில் அனைத்து பிரிவில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவர்கள் கௌரவிக்கப்படவுள்ளனர்.

வருடாந்தம் இம்மன்றத்தினால் உயர்தரம் மற்றும் காபொத சாதாரண தரத்தில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற மாணவர்களிற்கு கௌரவமளிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply