மீண்டும் கடற்படையில் இணைந்த யோஷித ராஜபக்ஸவிற்கு நேற்று முதல் தற்காலிக லெப்டினன்ட் கொமாண்டர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இது கடற்படையினால் அறிவிக்கப்பட்டது.
சம்பந்தப்பட்ட சட்டங்களின்படி பாதுகாப்பு அமைச்சின் ஒப்புதலுடன் பதவியுயர்வு வழங்கப்பட்டதாக கடற்படை செய்தித் தொடர்பாளர் லெப்டினன்ட் கொமாண்டர் இசுரு சூரியபந்தர தெரிவித்துள்ளார்.