படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் சுகிர்தராஜன் நினைவேந்தல்

457 Views

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் சுப்பிரமணியம் சுகிர்தராஜனின் 14ம் ஆண்டு நினைவேந்தல் இன்று (25) மட்டக்களப்பு – காந்தி பூங்காவில் அமைந்துள்ள ஊடகவியலாளர் நினைவு தூபியில் அனுஷ்டிக்கப்பட்டது.

கிழக்கு மாகாண ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவர் தேவஅதிரன் தலைமையில் இடம்பெற்ற நினைவேந்தலில் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன், மட்டு மாநகரசபை முதல்வர் தி.சரவணபவான், பிரதி முதல்வர், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியேந்திரன், ஊடகவியலாளர்கள், இலங்கை மக்கள் தேசிய கட்சி தலைவர் நா.விஷ்ணுகாந்தன் உட்பட பலர் கலந்து கொண்டனர்

இதில் கலந்து கொண்டவர்கள் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளருக்கு அமைக்கப்பட்ட நினைவு தூபிக்கு முன்னால் அவரின் திருவுருவப்படத்தை வைத்து, அதற்கு மலர்மாலை அணிவித்து, ஈகைச்சுடர் ஏற்றி 2 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினர்.

Leave a Reply