‘பசு அமைச்சரவை’ அமைக்க மத்தியப் பிரதேச அரசு முடிவு

657 Views

இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தில் பசுக்களின் பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டிற்காக ‘பசு அமைச்சரவை’ அமைக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது.

இது குறித்து, முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தனது ட்விட்டர் பக்கத்தில்,

“மாநிலத்தில் உள்ள பசுக்களைப் பாதுகாக்கவும் வளர்க்கவும் ’பசுஅமைச்சரவை’ அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.” என்று  தெரிவித்துள்ளார்.

கால்நடை வளர்ப்பு, வனம், பஞ்சாயத்து மற்றும் ஊரக வளர்ச்சி, வருவாய், விவசாயிகள் நலத்துறை போன்றவை இந்த அமைச்சகத்தில் சேர்க்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், “முதல் கூட்டம் கோபாஷ்டமியைக் கொண்டாடும் வகையில் நவம்பர் 22 நண்பகல் 12 மணிக்கு, அகர் மால்வாவில் உள்ள பசு சரணாலயத்தில் நடைபெறும்.” என்று அவர் அறிவித்துள்ளார்.

இந்நிலையில், 2017 செப்டம்பர் மாதம், பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான மத்தியப் பிரதேச அரசால்,  இந்தியாவின் முதல் பசு சரணாலயமான ’காம்தேனு கவு’ அமைக்கப்பட்டது. போபாலில் இருந்து 190 கிமீ வடமேற்கே உள்ள அகர் மால்வாவில், 472  ஏக்கர் பரப்பளவில் சுமார் 32 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்டது. பின்னர் இந்தச் சரணாலயம் நிதி நெருக்கடிகளால் தனியார்மயமாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply