பங்களாதேசத்திற்கு இலங்கையின் நிலை ஏற்படாது – செயிக் ஹசீனா

85 Views

பொருளாதாரத்தில் வீழ்ச்சி கண்டு அரசியல் நெருக்கடிகளை சந்திக்கும் இலங்கையை போன்றதொரு நிலை பங்களாதேசத்திற்கு வராது என அதன் பிரதமர் செயிக் ஹசீனா தெரிவித்துள்ளார்.

பி.என்.பி கட்சி ஆட்சியில் இருந்திருந்தால் ஒருவேளை பங்களாதேசமும் இலங்கையை போல மாற்றம் பெற்றிருக்கலாம். ஆனால் நாம் அதில் இருந்து நாட்டை மீட்டுள்ளோம்.

2001 ஆம் ஆண்டில் இருந்து 2006 ஆம் ஆண்டு வரையிலும் கட்சி ஆட்சியில் இருந்தபோது ஊழல் மிக்க நாடு என் பங்களாதேசம் உலக அரங்கில் பெயர் பெற்றிருந்தது. இங்கும் பயங்கரவாத தாக்குதல்கள் இடம்பெற்றன. நாட்டில் 500 இற்கு மேற்பட்ட இடங்களில் கைக்குண்டுத் தாக்குதல்கள் இடம்பெற்றிருந்தன.

முன்னாள் நிதி அமைச்சரும் குண்டுத்தாக்குதலில் கொல்லபட்டிருந்தார் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply