நைஜீரிய கடற் பிராந்தியத்தில் வைத்து 18 இந்தியர்கள் கடத்தப்பட்டனர்

நைஜீரியா அருகே கொங்கோங் சரக்கு கப்பல் கடற்கொள்ளையர்களால் செவ்வாய்க்கிழமை கடத்தப்பட்டது. செவ்வாய்க்கிழமை இரவு சுமார் 7:20 மணியளவில் அந்தக் கப்பலில் புகுந்த கடற்கொள்ளையர்கள், தாக்குதல் நடத்தினர். அப்போது அந்த கப்பலைச் சேர்ந்த 19 பணியாளர்களை கடத்திச் சென்றனர்.

இந்நிலையில், கடத்தப்பட்ட 19 கப்பல் பணியாளர்களில் 18 பேர் இந்தியர்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ஒரு துருக்கி நாட்டைச் சேர்ந்தவர். அந்த கப்பல் தற்போது நைஜீரிய கடற்படையின் கட்டுப்பாட்டில் பாதுகாப்பாக உள்ளதாகக் கூறப்படுகிறது.

இருப்பினும், கடத்தப்பட்ட கப்பல் பணியாளர்கள் 19 பேர் இருக்கும் இடம் மற்றும் நிலை தொடர்பாக தகவல்கள் இன்னும் கண்டறியப்படவில்லை.