நெதர்லாந்திலும் கத்திக்குத்து;மூவர் காயம்

இன்று லண்டன் நகரில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலின் அதிர்ச்சியில் இருந்து ஐரோப்பா மீளும் முன்னர்,நெதர்லாந்தின் ஹேக்கில் நகரில் ஒரு பல்பொருள் அங்காடியில் கத்திக்குத்து தாக்குதல் இடம்பெற்றுள்ளது. நடத்தப்பட்ட தாக்குதலில் குறைந்தது மூன்று பேர் காயமடைந்துள்ளனர் என டச்சு காவல்துறை தெரிவிக்கிறது.

காயமடைந்தவர்களின் நிலை மற்றும் தாக்குதலுக்கான நோக்கம் பற்றி இதுவரை உறுதியான தகவல்கள் கிடைக்கவில்லை.

இந்த சம்பவம் நகரின் பிரதான சந்தை சதுர பகுதியில் உள்ள ஹட்சன் பே கடையில் நடந்தது என்று உள்ளூர் தகவல்கள் தெரிவிக்கின்றன

Leave a Reply