கடந்த 1990ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 09 திகதி இராணுவத்தினருடன் இணைந்து ஊர்க்காவல் படையினரால் மட்டக்களப்பு-சத்துருக்கொண்டான்,கொக்குவில், பிள்ளையாரடி கிராமங்களைச் சேர்ந்த கற்பினித் தாய்மார் பச்சிளம் குழந்தைகள்ääஆங்கவீனம் அடைந்தவர்கள் எனஇதில் 5 கைக்குழந்தைகள், 42 பத்து வயதுக்கு குறைவான சிறுவர்கள் 85,பெண்கள்,28 முதியவர்கள் உட்பட 186 தமிழர் படுகொலை செய்யப்பட்டனர்.
இதனை நினைவுகூரும் வகையில் வருடாந்த் குறித்த படுகொலைசெய்யப்பட்டவர்களின் நினைவாக சத்துருக்கொண்டான் சந்தியில் அமைக்கப்பட்டுள்ள நினைவுத்தூபியருகே உயிரிழந்தவர்களை நினைவுகூரும் வகையிலான இந்த நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.
படுகொலைசெய்யப்பட்ட உறவுகளின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்வில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள்ääஅரசியல்வாதிகள்,பொது அமைப்புகளின் பிரதிநிகள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
இதன்போது நினைவுத்தூபியில் நினைவுச்சுடர் ஏற்றப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டதை தொடர்ந்து உயிரிழந்தவர்களின் ஆத்மசாந்திக்கான பிரார்த்தனைகளும் முன்னெடுக்கப்பட்டன.
இவர்கள் படுகொலை செய்யப்பட்டதற்கான விசாரணைகள் நடைபெற்ற போதும் இதில் சம்பந்தப்பட்டவர்களுக்கு எந்தவித தண்டனைகளும் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.