மட்டக்களப்பின் தொன்மை வாய்ந்த புனித மைக்கேல் கல்லூரியின் 146 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டும் மற்றும் கல்லூரியின் பெருமைகளை வெளிப்படுத்தும் வகையிலும் நீரை சேகரித்து அடுத்த சந்ததிக்கு வழங்குவோம் என்னும் தொனிப்பொருளில் ஆறாவது ஆண்டு ‘மைக் வோக் -2019 ‘; நடைபவனி இன்று (28)மட்டக்களப்பு நகரில் இடம்பெற்றது.
கல்லூரியின் பழைய மாணவர்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில் மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் அருட்கலாநிதி பொன்னையா ஜோசப் ,பழைய மாணவர் சங்கத்தின் தலைவர் பாடசாலை அதிபர் பயஸ் ஆனந்தராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதன்போது ஆரம்ப நிகழ்வு மைக்கேல் கல்லூரியின் உள்ளக அரங்கில் ஆரம்ப நிகழ்வு நடைபெற்றது.
இதன்போது இலங்கையில் நீடித்த சமாதானத்தினை வலியுறுத்தி நடைபயணம் மேற்கொண்டதுடன் ரசியாவின் உயரமான மலையினை ஏறிய மாணவர்கள் இதன்போது கௌரவிக்கப்பட்டனர்.
மைக்வோக் ஞாபகார்த்தமாக இதன்போது ரீசேட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டதுடன் மைக்கேல் கல்லூரியின் செயற்பாடுகள் அடங்கிய நூல்வெளிட்டுவைக்கப்பட்டது.
அதனைத்தொடர்ந்து நடைபவனி பாடசாலை வளாகத்தில் ஆரம்பித்து மட்டக்களப்பு திருமலை வீதி வளியாக தாண்டவன்வெளி நோக்கிச் சென்று அங்கிருந்து மீண்டும் பாடசாலை நோக்கிவந்தது.
இந்த பேரணியில் நீரின் அவசியத்தினை வலியுறுத்தும் வகையிலும் அதனை எதிர்கால சமூகத்திற்கு சேமித்துவைக்கவேண்டிய அவசியம் குறித்தும் பல்வேறு விழிப்புணர்வு பதாகைகளையும் நடைபவணியில் கலந்துகொண்டவர்கள் ஏந்தியிருந்தனர்.