‘நீராவியாடியில் நீதி செத்தது’; மட்டக்களப்பில் மக்கள் போராட்டம்

மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்னிலையில் இன்று காலை 9.30 மணியளவில் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது
நீராவியடி பிள்ளையார் ஆலய வளாகத்தில் நீதிமன்ற உத்தரவையும் மீறி பௌத்த பிக்குவின் உடல் தகனம் செய்யப்பட்டதை கண்டித்தும் பொதுமக்கள் தாக்கப்பட்டதை கண்டித்தும் மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பாக கண்டன போராட்டம் நடைபெற்றது .

நீதித்துறையை அவமதிக்காதே,நீராவியாடியில் நீதி செத்தது சிறுபாண்மையினரின் காணிகளை அபகரிப்பதை நிறுத்து சிறுபாண்மையினரின் மீதான தாககுதலை நிறுத்து சிறுபாண்மையினரின் வணக்கஸ்தலங்களை ஆக்கிரமிப்பதை நிறுத்து என்ற பதாதைகளை ஏந்தியவண்ணம் கோசங்களை எழுப்பின்.
இவ் ஆர்ப்பட்டத்தில் சிவில் சமுக அமைப்பு சமய தலைவர்கள் பொதுமக்கள் மற்றும் இளைஞர்களும் கலந்து கொண்டனர்.