முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரி. சரவணராஜா அவர்களுக்கு அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டதால் அவர் தனது பதவியை துறந்து நாட்டைவிட்டு வெளியேறியுள்ளது தொடர்பில் இலங்கை அரசு முழு அளவிலான விசாரணையை மேற்கொள்ள வேண்டும் என கொழும்பை தளமாகக் கொண்ட சட்டவாளர்கள் மற்றும் நீதிபதிகளை கொண்ட கூட்டமைப்பு இன்று (30) வேண்டுகோள் விடுத்துள்ளது.
நீதிபதியின் விலகல் தொடர்பிலும், அவரின் உயிருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது தொடர்பிலும் நாம் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளோம். இது நீதித்துறைக்கும், அதன் சுயாதீனத்தன்மைக்கும் விடுக்கப்பட்ட அச்சுறுத்தலாகும்.
எனவே இந்த விவகாரம் தொடர்பில் முழுமையான விசாரணை தேவை. வெளிப்படைத்தன்மை முக்கியமானது. இந்த விசாரணையின் பின்னர் அரசு நீதியை பாதுகாக்க என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்பது தொடர்பில் பொதுமக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என அது மேலும் தெரிவித்துள்ளது.