நீதிக்காகப் போராடும் பெண்மணியின் குரலுக்கு பிரிட்டன் செவிமடுக்க வேண்டும் – கமல் ஹாசன் வேண்டுகோள்

372 Views

நீதிக்காகப் போராடும் பெண்மணியின் குரலுக்கு பிரிட்டன் செவிமடுக்க வேண்டும் – நடிகரும் மக்கள் நீதி மையத்தின் தலைவருமான கமல் ஹாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு, நீதி வேண்டி பிரித்தானியாவில் அம்பிகை செல்வகுமார் 16ஆவது நாளாக  உணவு தவிர்ப்பு போராட்டத்தை நடத்திக்கொண்டிருக்கின்றார்.

இந்த போராட்டத்திற்கு புலம் மற்றும் தாயகப்பகுதிகளில் ஆதரவுப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சியான மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமல் ஹாசன் குறித்த போராட்டத்திற்கு தனது ஆதரவினைத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில்,

“இன அழிப்புக்கு நீதி கிடைக்கக் கோரி லண்டனில் ஈழத்துச் சகோதரி அம்பிகை செல்வகுமார் பிப்ரவரி 27 முதல் உண்ணாநிலைப் போராட்டம் நிகழ்த்திக் கொண்டிருக்கிறார்.

image0 1 1 நீதிக்காகப் போராடும் பெண்மணியின் குரலுக்கு பிரிட்டன் செவிமடுக்க வேண்டும் - கமல் ஹாசன் வேண்டுகோள்

நீதிக்காகப் போராடும் பெண்மணியின் குரலுக்கு பிரிட்டன் செவிமடுக்க வேண்டும். சகோதரியின் போராட்டம் வெல்ல தமிழர்கள் தோள் கொடுக்க வேண்டும்”. என பதிவிட்டுள்ளார்.

Leave a Reply