நீண்ட நாட்களுக்கு பின்னர் திறக்கப்பட்ட அஞ்சல் அலுவலகம்

455 Views

கொரோனா வைரஸ் ஊரடங்கு தளர்வை அடுத்து வவுனியா உட்பட நாட்டில் ஊரடங்கு அமுல் செய்யப்படாத மாவட்டங்களில் இன்று அஞ்சல் சேவைகள் ஆரம்பிக்கப்பட்டன.

நாட்டில் கொரோனா தொற்று தீவிரம் அடைந்ததையடுத்து கடந்த மாதம் 20ஆம் திகதியுடன் மூடப்பட்டிருந்த வவுனியா அஞ்சல் சேவை அலுவலகம் 31 நாட்களுக்கு பின்னர் இன்று திறக்கப்பட்டுள்ளது.

எனினும் அஞ்சல் அலுவலகத்தில் குறைந்த அளவிலான மக்களே வரிசையில் காத்திருந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

நாட்டின் போக்குவரத்து இயல்புக்கு திரும்பும் வரை அஞ்சல் விநியோகத்தில் தாமதம் ஏற்படலாம் என இலங்கையின் அஞ்சல் அதிபர் ரஞ்சித் அபேரத்ன தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

அதேநேரம் வெளிநாடுகளுக்கான அஞ்சல்கள் மறுஅறிவித்தல் வரை ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply