நியூசிலாந்து எரிமலை வெடிப்பு ஐவர் பலி

நியூசிலாந்தில் உள்ள எரிமலை வெடித்ததில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளவும் பலர் காணாமல் போனதாகவும், காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

எரிமலை வெடிப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு சுற்றுலாப் பயணிகள் அங்குள்ள ஒயிட் தீவின் பள்ளத்தாக்கிற்கு சென்றுள்ளனர் என்பது தெரியவந்தது.

எரிமலை வெடிப்பு ஏற்பட்ட பகுதியில் இருந்து 23 பேர் மீட்கப்பட்டதாகவும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்றும் காவல்துறையினர் கூறுகின்றனர். மீட்பு பணிகளை மேற்கொள்ளவது தற்போதைய சூழ்நிலையில் மிகவும் ஆபத்தானது என்றும் தெரிவிக்கின்றனர்.

ஒயிட் தீவு வகாரி என்றும் அழைக்கப்படும், இந்த எரிமலை எந்த நேரத்திலும் வெடிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்பட்டது.