தற்போதைய நிதி நெருக்கடிகளை சமாளிப்பதற்காக சிறீலங்கன் வான்சேவையின் தரை மற்றும் உணவு விநியோக சேவைகளின் 49 விகித பங்குகளை வெளிநாட்டு அல்லது தனியார் நிறுவனங்களுக்கு விற்பனை செய்வதற்கு இலங்கை அரசு தீர்மானித்துள்ளதாக இலங்கையின் வான்போக்குவரத்து மற்றும் துறைமுகங்கள் துறை அமைச்சர் நிமால் சிறீபால இன்று (29) தெரிவித்துள்ளார்.
அரசு 51 விகித பங்குகளை வைத்திருக்கும். விமான நிறுவனத்தை மறுசீரமைப்பதன் முதல் படி இதுவாகும். விமான நிறுவனம் பில்லியன் டொலர்களுக்கு மேலாக கடன் சுமையால் நெருக்கடிகளை சந்தித்து வருகின்றது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.