நாட்டில் எந்த அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்பட்டாலும் அங்கு தமிழ்ச் சமூகம் புறக்கணிப்பு-கலையரசன் குற்றச்சாட்டு

“அம்பாறை மாவட்டத்தில் வாழும் தமிழ் மக்கள் அபிவிருத்தி ரீதியிலான திட்டங்களின் போது திட்டமிட்ட வகையில் புறக்கணிக்கப்படுகிறார்கள்” என  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் குற்றம்சுமத்தியுள்ளார்.

மேலும் நாட்டில் எந்த அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்பட்டாலும் அங்கு தமிழ்ச் சமூகம் புறக்கணிக்கப்படுகின்றது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பாராளுமன்றத்தில் நடைபெற்ற வாய்மூல விடைக்கான வினா நேரத்தின் போதே  அவர் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.