நாட்டின் பெயரை தனி சிங்களத்தில் வைக்க பௌத்த மதகுருமார்கள் வலியுறுத்தல்

451 Views

உத்தேச புதிய அரசியல் அமைப்பில் நாட்டின் பெயர் தனி சிங்கள இனத்தின் பிரநிதித்துவப்படுத்துவதாக  காணப்பட வேண்டும். சிங்கள மொழி மட்டும் அரச கரும மொழியாக அறிவிக்கப்படுவதுடன், தமிழ், ஆங்கிலம் மொழிகள் 2ம் மொழியாக காணப்பட வேண்டும் என மூத்த பௌத்த மத தலைவர்கள் அரசாங்கத்திற்கு யோசனை முன்வைத்துள்ளனர்.

அதிகார பகிர்வு எவ்வழியிலும் இடம் பெறகூடாது . ஒற்றையாட்சியின் அம்சங்களை பாதுகாக்க சிறப்பு பொறிமுறை செயற்படுத்த வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

உத்தேச புதிய அரசியல் அமைப்பு தொடர்பிலான நிபுணர் குழுவிடம் முன்வைத்துள்ள பரிந்துரைகளிலேயே மூத்த பௌத்த மத தலைவர்கள் இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர்.

Leave a Reply