நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் விடுக்கும் அவசர விழிப்புச் செய்தி

562 Views

தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான பிரித்தானியாவின் தடைக்கு எதிராக நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் முன்னெடுத்து வரும் சட்ட நடவடிக்கையினை மையப்படுத்தி, சமகாலத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும்

இணையவழி கையெழுத்து போராட்டத்துக்கும், நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்கும் எவ்விதமான தொடர்பும் இல்லை என்பதோடு, இதனோடு தொடர்புடையதாக காணப்படுகின்ற

நிதி சேகரிப்பு தொடர்பிலும் விழிப்பாக இருக்குமாறு நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்  வேண்டிக்கொள்கின்றது.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் மேல்முறையீட்டின் முதல் களம் வெற்றியினைக் கண்டுள்ளது. அடுத்ததாக என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து இரு தரப்பு கருத்துகளை இரண்டு வாரங்களில் சமர்பிக்கும்படி மேன்முறையீட்டு ஆணையம் கூறியுள்ளது. இந்த தீர்ப்பின் அடிப்படையில் பிரித்தானிய உள்துறைச் செயலர் தமிழீழ விடுதலைப் புலிகளை தடை செய்யப்பட்ட அமைப்புகளின் பட்டியலிலிருந்து அகற்ற வேண்டும் என்று நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் வாதிடவுள்ளதோடு, அடுத்த களம் நோக்கிய  சட்ட முன்னெடுப்புக்களில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தற்போது ஈடுபட்டுள்ளது.

இச் சட்டப் போராட்டத்தினை அரசியல் தளத்தில் கூர்மைப்படுத்தும் செயல் முனைப்பு தொடர்பிலான அறிவித்தலை நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அடுத்த வாரம் வெளியிடவுள்ளது. இந்த சட்டப்போராட்டத்துக்கு பங்களிப்பு செய்ய விரும்பும் உறவுகள், பிரித்தானிய நாடுகடந்த தமிழீழ அரசாங்க உறுப்பினர்களையோ அல்லது

UK அலுவலக தொடர்பிலக்கம் : 02071936655

மின்னஞ்சல்: adminuk@tgte. org

வழி தொடர்பு கொள்ளுமாறு வேண்டப்படுகின்றனர்.

தடை செய்யப்பட்ட அமைப்புகளின் பட்டியலில் தமிழீழ விடுதலைப் புலிகளைத் தொடர்ந்து வைத்துக் கொள்வது என்று பிரித்தானியாவின் உள்துறைச் செயலர் முடிவெடுத்த போது, தடை மீளாய்வுக் குழு தன்னுடைய முடிவுகளை உள்துறை செயலருக்கு வழங்கிய போது, அந்த முடிவுகளை தவறாக கூறியிருப்பதாக மேன் முறையீட்டு ஆணையம் தன்னுடைய வெளிப்படையான தீர்ப்பில் கூறியுள்ளது.
கூட்டுப் பயங்கரவாதப் பகுப்பாய்வு மையம் தெரிவித்த கருத்துகளைத் இந்தக்குழு துல்லியமாக தொகுத்துச் கூறவில்லை என தடை செய்யப்பட்ட அமைப்புகளுக்கான மேல்முறையீட்டு ஆணையம் தெரிவித்துள்ளது. ஆகவே அடிப்படையில் தமிழீழ விடுதலைப் புலிகளை தொடர்ந்து பட்டியலில் வைத்திருக்க எடுக்கப்பட்ட முடிவும் சட்டத்துக்கு முரணானது என ஆணையம் தீர்ப்பளித்துள்ளமை இங்கு குறிப்பிடதக்கது.

Leave a Reply