நல உதவிகளிலேயே வாழ நாங்கள் அவுஸ்திரேலியா வரவில்லை: ஈழத்தமிழ் அகதி

192 Views

அவுஸ்திரேலியாவுக்கு புதிதாக வரும் புலம்பெயர்ந்தவர்கள், அகதிகள் மீள்குடியமர அவுஸ்திரேலிய சமூகங்கள் உதவுவதாகக் கூறியிருக்கிறார் ஈழத்தமிழ் அகதியான சங்கர் காசிநாதன். தனது சொந்த அனுபவத்தில் இதைக் கூறுவதாக சங்கர் குறிப்பிட்டுள்ளார்.

“இலங்கையிலிருந்து வெளியேறி அவுஸ்திரேலியாவில் தஞ்சமடைந்த எங்களது குடும்பம் மீள்குடியமர அவுஸ்திரேலியாவில் எங்கள் அருகாமையில் வசித்தவர்கள் உதவியிருக்கிறார்கள். எங்களுக்கு தேவையான பொருட்களைப் பெற, உடைகளைப் பெற, வேலைகளைப் பெற உதவியிருக்கிறார்கள். எங்களுக்கு உணவுக்கூட அளித்திருக்கிறார்கள்,” என அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

ஆனால், அவுஸ்திரேலியாவில் வழங்கப்படும் நல உதவிகளிலேயே வாழ நாங்கள் அவுஸ்திரேலிய வரவில்லை எனக் குறிப்பிட்டுள்ள சங்கர், “ஒரு வேலையைப் பெற்று எங்களது தேவைகளை நாங்களே பார்த்துக்கொள்ளவதற்கு தான் நாங்கள் முன்னுரிமை அளித்திருக்கிறோம்,” என்கிறார்.

Leave a Reply