நல்லூர் திருவிழா இன்று ஆரம்பமாகின்றது; காலை 10.00 மணிக்கு கொடியேற்றம்

287 Views

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற நல்லூர் கந்தசுவாமி ஆலயப் பெருந்திருவிழா இன்று மு.ப. 10.00 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிறது.

தொடர்ந்து 25 நாட்கள் இடம்பெறவுள்ள இந்தப் பெருந்திருவிழாவில், 10 ஆம் நாளான ஓகஸ்ட் 03 ஆம்திகதி மஞ்சத் திருவிழாவும், ஓகஸ்ட் 12 ஆம் திகதி சூர்யோற்சவமும் அன்று மாலை கார்த்திகை உற்சவமும் இடம்பெறவுள்ளன.

13 ஆம் திகதி வியாழக்கிழமை கைலாச வாகனமும், மறுநாள் வெள்ளிக்கிழமை வேல் விமானத் திருவிழாவும், 16 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை சப்பைரதத் திருவிழாவும் அடுத்த நாள் – 17 ஆம் திகதி திங்கட்கிழமை தேர்த் திருவிழாவும், 18 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை தீர்த்தத் திருவிழாவும் இடம்பெறவுள்ளன.

கொரோனா அச்சுறுத்தலால் மட்டுப்படுத்தப்பட்ட பக்தர்களுடனே திருவிழா இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply