தைவானில்  தொடரூந்து விபத்து- 36 பேர் உயிரிழப்பு

322 Views

தைவானில்  நடந்த தொடரூந்து விபத்தில் 36 பேர் உயிரிழந்துள்ளனர் என்று அந்நாட்டு ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

தைவானில் சரியாக நிறுத்தி வைக்கப்படாத பாரஊர்தி ஒன்று   தண்டவாளத்தில் விழுந்ததால் அதன்மீது மோதி தொடரூந்து  தடம்புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.

தைவானின் தாய்டங் நோக்கி சென்றுகொண்டிருந்த பயணகள் தொடரூந்து, ஹூவாலியன் அருகே உள்ள ஒரு சுரங்கப்பாதையை நெருங்கியபோது விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தில் 36 பேர் உயிரிழந்ததாகவும், 72 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டதாகவும் முதற்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளன. காயமடைந்தவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை உயரலாம் என அஞ்சப்படுகிறது.

தொடர்ந்து மீட்பு பணி நடைபெற்று வருவதாகவும் விபத்து குறித்து விசாரணைகள் நடைபெறும் என்றும் தொடரூந்து சேவைகள் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Leave a Reply