தையிட்டி திஸ்ஸ விகாரை தொடர்பில் மீண்டும் கவனயீர்ப்பு போராட்டம்

தையிட்டியில் தனியார் காணியில், சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் திஸ்ஸ விகாரையை அகற்றுமாறு கோரி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது.

இன்று மாலை 4 மணிக்கு ஆரம்பமாகும் குறித்த கவனயீர்ப்பு போராட்டம் நாளை மாலை 4.30 மணிவரை நடத்த தீர்மானிக்கப்பட்டது.

இந்த போராட்டத்தை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஏற்பாடு செய்துள்ளதாக அந்த கட்சியின் செயலாளர் அறிக்கையொன்றை விடுத்து தெரிவித்துள்ளார்.