தையிட்டியில் விகாரையை அகற்றக் கோரி தொடரும் போராட்டம்-இராணுவமும் குவிப்பு

01 5 தையிட்டியில் விகாரையை அகற்றக் கோரி தொடரும் போராட்டம்-இராணுவமும் குவிப்பு

யாழ்ப்பாணம் தையிட்டி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள விகாரையை அகற்றும் மாறு கோரி தொடர் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில்,  விகாரையை சூழவுள்ள வீதிகளில் இராணுவத்தினர் மற்றும்  காவல்துறையினர், உழவு இயந்திரங்களில் முட்கம்பிகள், வீதி தடை கம்பிகள் என்பவற்றை வீதிகளில் போட்டு, வீதி தடைகளை ஏற்படுத்தியுள்ளனர்.

அதேவேளை பெருமளவான இராணுவம் துப்பாக்கிகளுடன் விகாரையை சூழவுள்ள பகுதிகளில் குவிக்கப்பட்டு, கடுமையான பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.