தேர்தல் தொடர்பான கலந்துரையாடல்

திருகோணமலை மல்லிகா தனியார் விடுதியில்  புதன்கிழமை  (18)
பஃப்ரல் அமைப்பு ஏற்பாடு செய்த  தேர்தல் தொடர்பான கலந்துரையாடல் நடைபெற்றது. இவ் நிகழ்வு மாவட்ட சமூக பணியில் உள்ளவர்களுக்கு பஃப்ரல் அமைப்பின் [PAFFPREL] தெளிவுபடுத்த நிகழ்வாக அமைந்தது.
இதில் பஃப்ரல் அமைப்பின் தேசிய இணைப்பாளர் சுஜீவகயானத் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.மார்ச் 12 இயக்கத்தை வலுப்படுத்துவதற்கான மாவட்ட வலையமைப்பு தகவல் திரட்டல் மற்றும் நாட்டின் தற்போதைய நிலையில் மக்கள் மத்தியில் தேர்தல் தொடர்பான முறை, வாக்குரிமை தொடர்பான விளக்கங்கள் வழங்கப்பட்டது.
நாட்டின்   தேர்தல் நடைபெறும் போது  மக்களின் வாக்குரிமை  பற்றிய நிலையான கொள்கை  கொண்டு வர வேண்டும் . தேர்தல் ஆணைக்குழு தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று கூறினார்கள் ஆனால் நாட்டின் தேர்தல் நடைபெற பணம் இல்லை என்ற நிலை காணப்படுகிறது . ஆகவே நாம் நாட்டின் தேர்தல் தொகுதியில் விழிப்புடன் இருக்க வேண்டும் என்ற தகவல்கள் பரிமாற்றப்பட்டது.
இவ் கலந்துரையாடலில் திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த மூவினங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும்   ஆண் பெண் அரசியல் சமூக நலன்விரும்பிகள் சமூகஆர்வலர்கள் என 20 க்கும் மேற்பட்டோர் பங்குபற்றியிருந்தனர்.