பதிவாளர் திணைக்களத்தின் சுற்றுநிரூபத்துக்கு செந்தில் கடும் எதிர்ப்பு

பிறப்பு, இறப்பு சான்றிதழில் இனத்தினை குறிப்பிடுவது குறித்து பதிவாளர் நாயக திணைக்களம் வெளியிட்டுள்ள சுற்றுநிரூபத்தை வன்மையாக கண்டிப்பதாக கிழக்கு மாகாண ஆளுனரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவருமான செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
பிறப்பு, இறப்பு சான்றிதழ்களில் தமது இனத்தை குறிப்பிடுவது தொடர்பாக பதிவாளர் நாயக திணைக்களத்திற்கு சுற்றுரூபம் வெளியிட எவ்வித உரிமையும் இல்லை.
இலங்கையர் என்ற வகையில் தனது இனத்தை பிறப்பு இறப்பு சான்றிதழ்களில் குறிப்பிட இந்நாட்டு பிரஜை என்ற வகையில் அனைவருக்கும் உரிமை உள்ளது.
பிரஜா உரிமை இல்லாத சமூகமாக நாம் இருந்த பொழுது, இந்தியா வம்சாவளி தமிழர்கள் என்ற அடையாளமே எமக்கான அங்கீகாரமாக இருந்தது. எம் இனத்தின் அடையாளத்தை தீர்மானிப்பதற்கு மூன்றாம் தரப்பினருக்கு எவ்வித உரிமையும் கிடையாது. 1948 ஆம் ஆண்டுகளில் பிரஜா உரிமை இன்றி இருந்த நம் சமூகம் கிட்டத்தட்ட 40 வருட போராட்டங்களுக்கு பிறகு இந்திய வம்சாவளியினர் என்ற அங்கீகாரத்துடன் பிரஜா உரிமை பெற்றது.
இந்திய வம்சாவளி தமிழ் மக்களை, ‘இலங்கை தமிழர்’ என அடையாளப்படுத்த முற்படுவது அம்மக்களின் அடையாளத்தை மறைக்கும்  ஒரு செயல்பாடாகும். இவ்வாறான சுற்றுநிரூபங்களை வெளியிடுவதை வன்மையாக கண்டிக்கிறேன் என்றும் அவர் கூறியுள்ளார்.