தேர்தலைப் புறக்கணிக்குமாறு கூறும் உரிமை யாருக்கும் கிடையாதாம் – மன்னார் பேராயர் கூறுகிறார்

650 Views

சிறீலங்காவின் அரச தலைவர் தேர்தலைப் புறக்கணிக்கும் பணிகளை சிலர் செய்து வருகின்றனர். ஆனால் அவ்வாறு கூறுவதற்கு யாருக்கும் உரிமை கிடையாது என ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசா வெற்றி பெறுவதற்கு தனது ஆசிகளை வழங்கிய பின்னர் மன்னார் மாவட்ட பேராயர் லயனல் இமானுவேல் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

மன்னார் பேராயரின் இல்லத்திற்கு ஆசிகளை பெறுவதற்காக சஜித் கடந்த வெள்ளிக்கழமை சென்றபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தமிழ் மக்களின் வாக்குகளை பெறும் நோக்கத்துடன் தனது பிரச்சார பணிகளுக்காக சஜித் மன்னாருக்கு சென்றிருந்தார்.

இனங்கள் எல்லாம் ஒற்றுமையாக வாழ வேண்டும், சில குழுவினர் தேர்தலைப் புறக்கணிக்குமாறு கூறி வருகின்றனர் அவ்வாறு தெரிவிப்பதற்கு அவர்களுக்கு உரிமை கிடையாது என இமானுவேல் மேலும் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, ஈ.பி.ஆர்.எல்.எப், தமிழ் மக்கள் கூட்டணி, தமிழ்த் தேசிய மக்கள் முன்னனி ஆகிய கட்சிகள் தேர்தலைப் புறக்கணிக்குமாறு தெரிவித்து வருவதாகவும், இரு பிரதான வேட்பாளர்களும் தமிழ் கட்சிகள் சமர்ப்பித்த 13 அம்சக் கோரிக்கைகளை ஏற்க மறுத்ததனதல் அவர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளதாகவும் கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

Leave a Reply