தேர்தலில் போட்டியிட மாட்டேன்! சம்பந்தன் திடீர் அறிவிப்பு

419 Views

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் நோக்கம் தமக்கில்லை எனவும் அது தொடர்பில் கட்சி இறுதி முடிவு மேற்கொள்ளும் எனவும் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்தார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உயர்மட்டக்குழு கூட்டம் கொழும்பில் 2ஆம் திகதி இரவு நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் கலந்துரையாடப்பட்ட விடயங்கள் தொடர்பில் நேற்று கேள்வி எழுப்பியபோதே இந்த விடயத்தை வெளியிட்டுள்ளார்.

ஜனாதிபதியின் உரை தொடர்பிலும் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல் குறித்தும் கலந்துரையாடியதாக இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் நோக்கம் தமக்கில்லை எனவும் அது தொடர்பில் கட்சி இறுதி முடிவு மேற்கொள்ளும் எனவும் அவர் பதிலளித்தார்.

Leave a Reply