தேசியப் பொருளாதாரத்தை ஊக்கிவிக்க சீனாவிடம் நிதி பெற அரசு முயற்சி – மங்கள சமரவீர சாடல்

391 Views

சர்வதேச நாணய நிதியத்துடன் இணைந்து பொருளாதாரத்தை மீட்டெடுப் பதற்கான செயற்திட்டத்தை முன்னெடுப் பதற்குப்பதிலாக,   அரசாங்கம் சீனாவிடம் இருந்து நிதியைப் பெறுவதற்கு முயற்சி செய்கின்றது என முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், சர்வதேச நிதியத்துடன் இணைந்து பொருளாதாரத்தை மீட்டெமுப்பதற்கான முறையான செயற்திட்டமொன்றை முன்னெடுப்பதற்குப் பதிலாக, அரசாங்கம், தற்காலிகமான பொருளாதார மீட்சிக்காக சீனாவிடம் ஒரு மில்லியன் டொலர் நிதியைப் பெறவுள்ளது. இது எதனடிப்படையிலான பெறுகை? அத்தோடு இதனை மீளச்செலுத்துவதற்குரிய காலப்பகுதி எவ்வளவு, என்று மங்கள சமரவீர கேள்வி எழுப்பியுள்ளார்.

சிறீலங்காவிற்கு 1.5 பில்லியன் டொலர் நிதியை (நாணய இடமாற்று அடிப்படை) வழங்குவதற்கு சீனா அனுமதியளித்திருப்பதாக நிதி, மூலதனச் சந்தை,அரசதொழில் முயற்சி மற்றும் மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளதாக பிரபல ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு நேற்றைய தினம் செய்தி வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply