தேசியப் பட்டியலில் ரணில் நாடாளுமன்றம் செல்கின்றார் – கட்சி மத்திய குழு இன்று முடிவு

299 Views

ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப்பட்டில் நாடாளுமன்ற உறுப்பினராக, கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை நியமிப்பதற்கு அக்கட்சியின் மத்திய செயற்குழு அனுமதி வழங்கியுள்ளது.

ஐ.தே.கவின் மத்திய செயற்குழுக் கூட்டம் இன்று சிறிகொத்தவில் நடைபெற்றது.

இதன்போது ரணில் விக்கிரமசிங்கவின் பெயரை கட்சி தவிசாளரும், முன்னாள் அமைச்சருமான வஜிர அபேவர்தன முன்மொழிய, முன்னாள் எம்.பியான ஆனந்த குலரத்ன வழிமொழிந்தார். இப்பெயர் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்படி ரணில் விக்கிரமசிங்கவின் பெயர், கட்சியின் பொதுச்செயலாளரால் தேர்தல் ஆணைக்குழுவுக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளது.

Leave a Reply