அனைத்துலக சிறுவர் தினத்தை உலக நாடுகள் கொண்டாடி வருகையில் சிறீலங்காவின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள தமிழ் இனம் சிறீலங்கா படையினரால் கொல்லப்பட்ட தமது சிறுவர்கள் மற்றும் குழந்தைகளை நினைவு கூர்ந்ததுடன், சிறீலங்கா படையினரால் வலிந்து காணாமலாக்கப்பட்ட தமது சிறுவர்களுக்கான நீதி வேண்டி போராட்டம் ஒன்றையும் மேற்கொண்டிருந்தனர்.
சிறீலங்காவின் தென்னிலங்கையில் பெரும்பான்மைச் சிங்களச் சிறுவர்கள் சிறுவர் தினத்தை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் போது வடக்கிலும் கிழக்கிலும் உள்ள மக்கள் தமது குழந்தைகளை வலிகளுடன் தேடி வருகின்றனர்.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் சிறீலங்கா அரசினால் வலிந்து காணாமலாக்கப்பட்ட சிறுவர்களுக்கு நீதி வேண்டி தமிழ் மக்கள் போராட்டங்களை நேற்றைய தினம் மேற்கொண்டதுடன், அதில் பெருமளவான சிறுவர்கள் கலந்து கொண்டதும் குறிப்பிடத்தக்கது.
வடக்கு மற்றும் கிழக்கில் சிறுவர்கள் போராட்டம்
தென்னிலங்கையில் கொண்டாட்டம்