201 Views
தென்னாபிரிக்க ஜனாதிபதி சிறில் ரமபோசா (Cyril Ramaphosa) இலங்கைக்கு சிறிய விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.
இந்தோனேசியாவில் இடம்பெற்ற G20 மாநாட்டில் கலந்துகொண்ட பின்னர் அவர் இலங்கைக்கு வருகை தந்து, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்த பின்னர் நாடு திரும்பியுள்ளார்.
கட்டுநாயக்க விமானப்படைத் தளத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.