துருக்கியில் தரைஇறங்கிய விமானம் சறுக்கிச் சென்று விபத்து

453 Views

துருக்கி நாட்டில் பயணிகள் விமானம் ஒன்று தரையிறங்கிய போது திடீரென விபத்து ஏற்பட்டு அந்த விமானம் 3 துண்டுகளாக உடைந்து நொறுங்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 179 பேர் படுகாயமடைந்ததாகவும் 3 பேர் உயிரிழந்ததாகவும் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது. துருக்கி நாட்டில் இஸ்தான்புல் நகரில் உள்ள விமான நிலையத்திற்கு பயணிகள் விமானம் ஒன்று, நேற்று தரை இறங்கியது. அந்த விமானத்தில், மொத்தம் 177 பயணிகளும் 6 விமான நிலைய ஊழியர்களும் இருந்தனர்.

விமானம் தரையிறங்கியபோது,  விமான நிலையத்தில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து கொண்டிருந்ததால், ஓடுபாதை ஈரப்பதத்துடன் காணப்பட்டது. அப்போது, தரையிறங்கிய விமானம் திடீரென வழுக்கிக்கொண்டு விபத்தில் சிக்கியதாகவும் கூறப்படுகிறது.

 

Leave a Reply