தீவிரவாதத்தை ஆதரித்த குற்றச்சாட்டில் இருவர் கைது

தீவிரவாதத்தை ஆதரித்த குற்றச்சாட்டில் மேலும் இருவர் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

2019ம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் முக்கிய சூத்திரதாரி சஹ்ரான் ஹாஷிமை பாதுகாத்தல் தொடர்பில் கைதானவர் மீது  குற்றம் சாட்டப்பட்டுள்ளது. முகரியாவ பகுதியில் இவ்வாறு கைதான நபர் 2018ம் ஆண்டில் சஹ்ரான் உட்பட ஐந்து பேரை கவனித்து வந்ததாக காவல்துறையினர் கூறியுள்ளனர்.

மேலும் மட்டக்களப்பு சிறைச்சாலையிலுள்ள 35 வயதுடைய கைது ஒருவரும் குறித்த குற்றச்சாட்டுக்காக நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார்.

Leave a Reply