தீர்மானத்தில் திருத்தம் கொண்டுவருவதாற்கான காலக்கெடு முடிந்தது

411 Views

ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் பிரித்தானியா தலைமையிலான இணைக்குழு நாடுகள் முன்வைக்கும் தீர்மானத்தில் திருத்தங்களை மேற்கொள்ளும் கால எல்லை கடந்த செவ்வாய்கிழமையுடன் (16) நிறைவுபெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு எதிர்வரும் 22 ஆம் நாள் இடம்பெறவுள்ளது. பெருமளவான மேற்குலக நாடுகள் தீர்மானத்திற்கு ஆதரவுகளை வழங்கியுள்ளன. எனினும் பாகிஸ்தான் நேரிடையாக தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இதனிடையே, அமெரிக்கா, இந்தியா, யப்பான மற்றும் அவுஸ்திரேலியா தலைமையிலான கூட்டணி நாடுகள் சிறீலங்கா மீது கடுமையான அழுத்தங்களை பிரயோகித்து வருவதாக கொழும்பு தகவல்கள் தெரிவித்துள்ளன. சுதந்திரமான இந்து-பசுபிக் பிராந்திய நடவடிக்கை தொடர்பில் இந்த அழுத்தங்கள் அமைந்துள்ளன.

இந்த நாடுகள் கடந்த 12 ஆம் நாள் முதல் தடவையாக கூட்டம் ஒன்றை நடத்தியிருந்தன.

Leave a Reply