திருகோணமலையில் சித்திரைக் கலை விழா

20240424 084605 திருகோணமலையில் சித்திரைக் கலை விழா
திருகோணமலை மாவட்ட தமிழ் அமுதம் கலைவட்டத்தின் சித்திரைக் கலை விழா ஞாயிற்றுக்கிழமை (21) திருகோணமலை நகர சபை மண்டபத்தில் இடம்பெற்றது.

தமிழ் அமுதம் கலைவட்டத்தின் தலைவரும் அதிபருமான திருமதி சுஜந்தினி யுவராஜா தலைமையில் இடம்பெற்ற சித்திரைக் கலை விழாவுக்கு கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் உதவிச் செயலாளர் திருமதி த.வருணி மற்றும் தம்பலகாமம் பிரதேச செயலாளர் திருமதி ஜெ.ஸ்ரீபதி ஆகியோர் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

ஊடகவியலாளரும் எழுத்தாளருமான திருமதி ஜெ.நித்தியானந்தன், ஓய்வுநிலை அதிபர்களான க.ஜெயநாதன், ப.மதிபாலசிங்கம், ந.நவரெத்தினராஜா, கெ.சித்திரவேலாயுதம் ஆகியோர் கெளரவ விருந்தினர்களாகவும், கிராம சேவையாளர், கலாசார உத்தியோகத்தர்கள், எழுத்தாளர்கள் சிறப்பு விருந்தினர்களாகவும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

கவிஞர் .அம்.கௌரிதாசன் அவர்கள் தலைமையில் கவியரங்கும், கவிஞர். க. யோகானந்தன் அவர்களின் தலைமையில் விவாத அரங்கும் , சிலம்பம், அகரம் மக்கள் கலைக்கூடம் மாணவர்களின் புல்லாங்குழல் இசையும், பேச்சு ,கவிதை, திருக்குறள் ,பாடல்கள் ,பிரகதீஸ்வரா நடன கலாலயா மாணவர்களின் நடனமும், சிவபாத நடனனாலயா மாணவர்களின் நடனம் உட்பட பல கலை நிகழ்வுகள் இடம் பெற்றது குறிப்பிடத்தக்கது.

20240424 084540 திருகோணமலையில் சித்திரைக் கலை விழா 20240424 084553 திருகோணமலையில் சித்திரைக் கலை விழா 20240424 084616 திருகோணமலையில் சித்திரைக் கலை விழா 20240424 084626 திருகோணமலையில் சித்திரைக் கலை விழா 20240424 084639 திருகோணமலையில் சித்திரைக் கலை விழா 20240424 084759 திருகோணமலையில் சித்திரைக் கலை விழா