திருகோணமலையில் உணவின்றித் தவிக்கும் மான்கள்

திருகோணமலையில்  பிட்டெரிக்  கோட்டைக்கு  அருகில் அமைந்துள்ள மான்கள்  சரணாலயத்தில்  வாழும்  மான்களுக்கும், தற்சமயம் “கோவிட் பயனத்தடை “ காரணமாக  மேலதிகமாக  உணவு  தேடி  திருகோணமலை வீதிகளில் அலைந்து திரிவதாக சமூக  ஊடகங்களில்  செய்திகள் வருகின்றது.  

கடந்த சில வருடங்களாக இவ் மான்களுக்கு ரோட்டரி கழகத்தின் சார்பில் காலை மற்றும் மாலை வேளைகளில் உணவு அளிக்கப் பட்டு வந்தது.

IMG 1623031516310 திருகோணமலையில் உணவின்றித் தவிக்கும் மான்கள்

பயனத்தடையின் காரணமாக உணவு அளிக்க முடியாத நிலைமை ஏற்பட்டது. தற்சமயம்  அரசிடம் விசேட அனுமதி பெற்று உணவு அளிக்கும் செயல்பாடு மீண்டும் தொடங்கியுள்ளது. ரோட்டரி கழகத்தின் சார்பில் திரு மருது அவர்கள் இச் செயல்பாட்டை நடைமுறை படுத்துகிறார்.

திருகோணமலையில்  வாழும்  மற்றும் இங்கு  வரும்  மக்கள், தங்களால் முடிந்தளவு  மான்கள்  சரணாலயத்துக்கு  நேரில் சென்று உணவு அளித்து  எங்கள்  மண்ணில் வாழும் இவ் அரிய உயிரினத்தைப் பாதுகாப்போம் என புத்தி ஜீவிகள் சிவில் சமூகத்தினர்கள் கேட்டுக் கொள்கின்றனர்கள்.