தியாகி பொன். சிவகுமாரின் 49வது ஆண்டு நினைவேந்தல்

தியாகி பொன்.சிவகுமாரன் அண்ணா அவர்களின் 45 ஆம் ஆண்டு வீரவணக்க நாள்!!📷 -  Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்

தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தின் முதலாவது தியாகியான பொன். சிவகுமாரின் 49வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.

யாழ் உரும்பிராயில் அமைந்துள்ள அவரது நினைவுச் சிலையின் முன்பாக நினைவேந்தல்  நிகழ்வு இடம்பெற்றது.

இவ் நினைவேந்தலில் முதலில் ஈகைச் சுடரேற்றப்பட்டு பொன். சிவகுமாரின் உருவச் சிலைக்கு  மலர் மாலை அணிவிக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் நினைவேந்தல் உரைகளும் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் த. சித்தார்த்தன் , முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா மற்றும் சுரேஸ் பிறேமச்சந்திரன், முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர்களான எம்.கே சிவாஜிலிங்கம், பா. கஜதீபன் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

இந்நிலையில், அவருடைய இந்த தியாக நாளை தமிழீழ மாணவர் எழுச்சி நாளாக நினைவு கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.