ஈகைச்சாவடைந்த தியாகி திலீபன் நினைவு தினத்தை முன்னிட்டு பிரித்தானியாவில் நேற்றைய தினம் (20.09) இரத்ததானம் செய்யப்பட்டுள்ளது.
பிரித்தானிய லிவர்புல் மாநகரில் Allerton All Hallow’s Church பகுதியில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்பாட்டாளர்களினால் குறித்த இரத்ததான நிகழ்வு இடம்பெற்றது.
“உதிரம் கொடுப்போம் உயிர் காப்போம்” என்னும் தொனிப் பொருளில் இக்குருதிக்கொடை முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.