தியாகி திலீபன் அவர்களின் நிறைவு நாள் நினைவேந்தல் நிகழ்வு மாநகரசபையின் ஏற்பாட்டில் இடம்பெறும்

1,059 Views

தியாகதீபம் தியாகி திலீபன் அவர்களின் 32ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வின் நிறைவு நாள் நிகழ்வு வழமை போன்று யாழ் மாநகரசபையின் ஏற்பாட்டில் இடம்பெறும் என யாழ் மாநகரசாபை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இது தொடர்பில் அதன் ஊடகக் குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

அந்த வகையில் இறுதி நாள் நிகழ்வு நல்லூரில் தியாகி திலீபன் அவர்கள் இத் தேசத்திற்காகவும், எமது மக்களுக்காகவும் அஹிம்சை வழியில் போராடி தனது இன்னுயிரை ஆகுதியாக்கிய இடத்தில் அக வணக்க நிகழ்வுகள் இடம்பெற்று அங்கிருந்து தியாகதீபம் தியாகி திலீபன் அவர்களின் நினைவுத் தூபி அமைந்துள்ள இடத்தில் இன்னுயிர் நீத்த நேரமான காலை 10.48 மணியளவில் அஞ்சலி நிகழ்வுகள் நடைபெறும்.

எனவே அஞ்சலி செலுத்தவரும் சகலரும் குறித்த நேரத்திற்கு முன்பாகவே (காலை 10.15 மணியளவில்) ஒன்றுகூடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

நிகழ்வின் பொதுச் சுடரினை எமது மக்களுக்காக உயிர்நீர்த்த மாவீரர்களின் பெற்றோரகளில் ஒருவர் ஏற்றிவைப்பார். அதனைத் தொடர்ந்து ஏனையோர் தமது மலரஞ்சலிகளை செலுத்துவர்.

இவ்வாறு இந் நினைவு நிகழ்வுகள் யாழ் மாநகரசபையின் ஏற்பாட்டில் உணர்வு பூர்வமாக நடைபெறுவதற்கான பூர்வாங்க ஏற்பாடுகள் பூர்த்திசெய்யப்பட்டுள்ளன. எமது மக்களின் உணர்வுகளையும், எமது மக்களின் தேவைகளையும் நன்குணர்ந்து செயற்படத் திடசங்கட்பம் பூண்டுள்ள நாம் அனைவரும் இந் நிகழ்வை உணர்வுபூர்வமாக அனுஷ;டிக்க ஒன்றுபட வேண்டியவர்களாக இருக்கின்றோம்.

எனவே மேற்படி உணர்வுபூர்வமான இறுதி நினைவு நாள் நிகழ்வில் கட்சி பேதங்களுக்கு அப்பால் சகல அரசியல் கட்சித் தலைவர்கள், மக்கள் பிரதிநிதிகள், சிவில் சமூகப்பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்கள், மாவீரர்களின் குடும்பங்கள் மற்றும் பொது மக்கள் அனைவரும் தமிழ் பேசும் மக்களாக ஒன்றாக அணிதிரண்டு நம் ஒற்றுமையை வெளிப்படுத்தி நிற்போமாக என பகிரங்க அழைப்பு விடுகின்றேன்.

Leave a Reply