தியாகி திலீபன் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வில் முதல்வர் ஆனல்ட் அவர்களும் அஞ்சலி செலுத்தினார்

388 Views

தியாகதீபம் தியாகி திலீபன் அவர்களின் 32ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வில் முதல்வர் ஆனல்ட் அவர்களும் அஞ்சலி செலுத்தினார்.

தியாகதீபம் தியாகி திலீபன் அவர்களின் 32ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகளின் ஆரம்ப நாள் நிகழ்வு இன்று 15.09.2019 ஞாயிற்றுக்கிழமை நல்லூரில் அமைந்துள்ள தியாகதீபம் தியாகி திலீபன் அவர்களின் நினைவுத் தூபி அமைந்துள்ள இடத்தில் நடைபெற்றது.

இவ் ஆரம்ப நாள் நிகழ்வில் யாழ் மாநகர முதல்வர் இம்மானுவல் ஆனல்ட் அவர்களும் கலந்து கொண்டு தியாக தீபம் தியாகி திலீபன் அவர்களின் நினைவுத்தூபியில் அமைக்கப்பட்டிருந்த படத்திற்கு மலர் மாலை அணிவித்து தனது அஞ்சலிகளை செலுத்தினார்.

நிகழ்வின் நினைவுச் சுடரினை எமது மக்களுக்காக உயிர்நீர்த்த மாவீரர்களின் பெற்றோரகளில் ஒருவர் ஏற்றிவைத்தார். அதனைத் தொடர்ந்து ஏனையோர் தமது அஞ்சலிகளை செலுத்தினர்.

Arnold தியாகி திலீபன் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வில் முதல்வர் ஆனல்ட் அவர்களும் அஞ்சலி செலுத்தினார்மேற்படி உணர்வுபூர்வமான ஆரம்ப நினைவு நாள் நிகழ்வில் கட்சி பேதங்களுக்கு அப்பால் அரசியல் கட்சிகளின் தலைவர்கள், மக்கள் பிரதிநிதிகள், சிவில் சமூகப்பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்கள், மாவீரர்களின் குடும்பங்கள், முன்னாள் போராளிகள், மற்றும் பொது மக்கள் என அனைவரும் தமிழ் பேசும் மக்களாக ஒன்றாக அணிதிரண்டு ஒற்றுமையை வெளிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

Leave a Reply