தாய்வானில் மூன்றாவது களமுனை – பொலிற்றிக்கோ

தாய்வானில் மூன்றாவது களமுனை திறக்கப்படப்போவதாக அமெரிக்காவை தளமாகக் கொண்ட பொலிற்றிக்கோ ஊடகம் தெரிவித்துள்ளது.

அமெரிக்கா மிகப்பெரும் போரை நடத்த தற்போது தயாராகவில்லை என்பதை பைடனின் ஓவல் காhரியாலய பேச்சு கோடிட்டு காட்டியபோதும். துற்போது இடம்பெறும் உக்ரைன், இஸ்ரேல் போர் என்பது அமெரிக்கா மற்றும் அதன் கூட்டணி நாடுகளுக்கும், ரஸ்யா, சீனா, ஈரான் மற்றும் வடகொரியா போன்ற நாடுகளுக்கும் இடையில் இடம்பெறும் போராகவே பார்க்கப்படுகின்றது.

பைடனின் பேச்சு இந்த இரு களமுனைகளையும் ஒன்றாக பார்ப்பதாகவே தெரிகின்றது. எனவேதான் இரு போருக்கான நிதி வழங்குவதிலும் அமெரிக்கா அதிக அக்கறை காட்டுகின்றது. அதேசமயம், மூன்றாவது களமுனையாக தாய்வான் போர் விரைவில் ஆரம்பமாகும் அறிகுறிகள் தென்படுகின்றன. எதிர்வரும் ஒரு இரு வருடங்களில் அது ஆரம்பமாகலாம் என தெரிவிக்கப்பட்டபொதும், அது மிக விரைவாக ஆரம்பமாவதற்கான அறிகறிகளே தென்படுகின்றது.

அமெரிக்கா அதற்கு தயாராகின்றது. அதற்கான வரவுசெலவுத்திட்டமும் தயராகின்றது. நிதி தொடர்பில் அமெரிக்கா தனது நட்புநாடுகளுடன் பேச்சக்களை ஆரம்பித்துள்ளது. மேற்குலகத்தின் படை கட்டமைப்பை மறுசீரமைப்பதே தற்போதைய முதன்தை நோக்காக அவர்கள் கருதுகின்றனர். என அது மேலும் தெரிவித்துள்ளது.