தான்சானியா அதிபர் மரணமடைந்து விட்டதாதக அறிவிப்பு

491 Views

தான்சானியா அதிபர் ஜான் மகுஃபூலி (வயது 61) மரணம் அடைந்துள்ளதாக   அந் நாட்டின் துணை அதிபர் சமியா சுலுஹு ஹாசன் அறிவித்துள்ளார்.

முன்னதாக  அதிபருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர்கள் கூறிவந்தனர். ஆனால், இது உறுதி செய்யப்படவில்லை. அதே நேரம் கொரோனா வைரஸ் குறித்தே சந்தேகங்களை எழுப்பிவந்தவர் சமியா சுலுஹு ஹாசன் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கடந்த இரண்டு வாரங்களாக பொது வெளியில் காணப்படாமல் இருந்த நிலையில் டார் எஸ் சலாம் என்ற இடத்தில் உள்ள மருத்துவமனையில் இதயக் கோளாறு காரணமாக அவர் இறந்துவிட்டதாக அரசுத் தொலைக்காட்சியில்  சமியா சுலுஹு அறிவித்துள்ளார்.

Leave a Reply