தரிசா பஸ்தியனின் கணினியை உடனடியாக திருப்பிக்கொடுங்கள் ; சர்வதேச அமைப்பு வலியுறுத்து

பத்திரிகையாளர் தரிசா பஸ்டியனின் மடிக்கணிணியை இலங்கை அதிகாரிகள் உடனடியாக திருப்பி ஒப்படைக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள பத்திரிகையாளர்களை பாதுகாப்பதற்கான குழு தரிசா துன்புறுத்தல்கள் எதுவுமின்றி தனது பத்திரிகை பணியை செய்வதற்கு அனுமதிக்கவேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.

கடந்த நவம்பரில் கொழும்பில் சுவிஸ்தூதரக பணியாளர் கடத்தப்பட்டமை தொடர்பில் இடம்பெற்றுவரும் விசாரணைகளின் தொடர்பில் சிஐடி அதிகாரிகள் தரிசா பஸ்டியனின் வீட்டை சோதனையிட்டு அவரது மடிக்கணிணியை எடுத்துச்சௌ;றுள்ளனர் என அவர் டுவிட்டரில் பதிவு செய்துள்ளார் என சர்வதே அமைப்பு தெரிவித்துள்ளது.

நியுயோர்க் டைம்சிற்காக பணியாற்றுபவரும்,இலங்கை அரசாங்கத்தின் சண்டே ஓப்சேவரின் முன்னாள் ஆசிரியருமான தரிசா பஸ்டியன் முன்னர் இரு தடவைகள் நீதிமன்ற உத்தரவின்றி தனது மடிக்கணிணியை கைப்பற்ற முயன்றனர், இம்முறை உத்தரவுடன் வந்திருந்தனர் என தெரிவித்துள்ளார்எனவும் பத்திரிகையாளர்களை பாதுகாப்பதற்கான குழு தெரிவித்துள்ளது.

தூதரக பணியாளரின் கடத்தல் நாடகம் ஒரு திட்டமிட்ட நாடகம் என குற்றம்சாட்டிவரும் அதிகாரிகள் தரிசா பஸ்டியன் தூதரக பணியாளருடன் தொடர்பிலிருந்தார்,அவருக்கு இந்த கடத்தல் விவகாரத்துடன் தொடர்புள்ளது என தெரிவிக்கின்றனர் என செய்தி அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

பஸ்டியன் கடந்த நவம்பரிலேயே இலங்கையிலிருந்து வெளியேறிவிட்டார்,அவரது குடும்ப உறுப்பினர்கள் வீட்டிலிருந்தவேளையே சோதனைகள் இடம்பெற்றுள்ளன என அறிக்கைகள் தெரிவித்துள்ளன.
தரிசா பஸ்டியனின் மடிக்கணிணியை கைப்பற்றியமைக்கு பத்திரிகையாளர்களை பாதுகாப்பதற்கான குழு கடுமையான ஆட்சேபணையை வெளியிடுவதாக தெரிவித்துள்ள அந்த அமைப்பின் ஆசியாவிற்கான ஆராய்ச்சியாளர் அலியா இப்திஹார் இந்த நடவடிக்கை பத்திரிகையாளரின் செய்தி மூலங்களிற்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என தெரிவித்துள்ளார்.

தரிசா பஸ்டியனிற்கு எதிரான அச்சுறுத்தும் நடவடிக்கைகளை இலங்கை அதிகாரிகள் உடனடியாக முடிவிற்கு கொண்டுவரவேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அவரது விமர்சனத்துடனான செய்திவெளியிடலிற்கான பழிவாங்கல் நடவடிக்கையாகவே இது இடம்பெறுகின்றது.
குறிப்பிட்ட மடிக்கணிணி கைப்பற்றப்பட்ட பின்னர் அது மாற்றங்களிற்கு உட்படுத்தப்பட்டுள்ளதா என ஆராயுமாறு 16 ம் திகதி நீதவான் உத்தரவிட்டுள்ளார்.