தமிழ் முற்போக்கு கூட்டணி ஆறுக்கும் மேற்பட்ட ஆசனங்களை வெல்லும்; மனோ கணேசன் உறுதி

231 Views

நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் தமிழ் முற்போக்கு கூட்டணி ஆறுக்கும் மேற்பட்ட ஆசனங்களை வெல்லும் என்று கூட்டணியின் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட வேட்பாளருமான மனோ கணேசன் தெரிவித்தார்.

2015 நடைபெற்ற பொதுத்தேர்தலில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் சார்பில் ஆறு பேர் தெரிவானார்கள். இம்முறை அதனை விடவும் எண்ணிக்கை அதிகரிக்கலாம். இரத்தினபுரி, கம்பஹா மற்றும் கேகாலை மாவட்டங்களில் எமது வேட்பாளர்கள் வெற்றி பெறுவதற்கு வாய்ப்பு இருக்கின்றது. அதே போல் கொழும்பில் இருந்தும் இருவர் வரலாம் எனவும் மனோ கணேசன் சுட்டிக்காட்டினார்.

அதேவேளை, ஜனநாயக மக்கள் முன்னணியில் இருந்து வெளியேறியவர்கள் விலைபோன அரசியல்வாதிகள் எனவும் மனோ விமர்சித்துள்ளார். அத்துடன் அரசியலமைப்பின் 13 மற்றும் 19 ஆவது திருத்தச்சட்டங்கள் என்பன இரு கண்கள்போன்றவை. அவற்றை நீக்குவதற்கு இடமளிக்கமாட்டோம் எனவும் அவர் குறிப்பிட்டார்.

Leave a Reply