தமிழ் மக்களுக்கு எதிரான இலங்கை அரசின் நடவடிக்கைகள் தொடர்கின்றன

மாவீரர் வாரத்தில் தமிழ் மக்கள் அஞ்சலி செலுத்துவதை தடுப்பதற்கு இலங்கை அரசு நீதி மன்றங்களில் வழக்குகளை பதிவு செய்தும், இனந்தெரியாத நபர்கள் மற்றும் இலங்கை காவல்துறையினரை பயன்படுத்தி தாக்குதல்களை மேற்கொண்டும் நடவடிக்கைகளில் ஈடபட்டிருந்தபோதும், தமிழ் மக்கள் எழுச்சியுடன் தமது மாவீரர்களை நினைவுகூர்ந்திருந்தனர்.

ஆனால் தற்போது நினைவேந்தல்களில் ஈடுபட்ட சிறுவர்கள் மீதும் இலங்கை அரசு நடவடிக்கைகளை எடுத்துவருகின்றது. கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லத்தில் இடம்பெற்ற வணக்க நிகழ்வின்போது போரளிகள் போன்று உடை அணிந்து சென்ற சிறுவர்களின் இல்லங்களுக்கு கடந்த வியாழக்கிழமை(30) சென்ற இலங்கை கவல்துறையினர் சிறுவர்கள், அவர்களின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் அனைவரையும் கோப்பாய் காவல்நிலையத்திற்கு விசாரணைக்கு வருமாறு அழைத்து வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளன.

அதேசயம், அவர்களின் உடைகளையும் காவல்நிலையத்திற்கு எடுத்தும் சென்றுள்ளனர்.