இலங்கை பற்றி பிரித்தானிய பாராளுமன்ற விவாதம்!

இனப்படுகொலைக்கு காரணமான இலங்கைப் போர்க்குற்றவாளிகளை பிரித்தானியா தடை செய்வது பற்றி கலந்துரையாட பிரித்தானிய பாராளுமன்றில் விவாதம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இது எதிர்வரும் செவ்வாய் அன்று (05 Dec 2023) மாலை 2.30 மணிமுதல் 90 நிமிடங்களுக்கு பாராளுமன்றின் வெஸ்ட் மினிட்டர் அரங்கத்தில் (Westminster Hall) நடைபெறவுள்ளது. தழிழருக்கான பிரித்தானிய அனைத்துகட்சி பாராளுமன்ற உறுப்பினர் குழுவின் (APPGT) தலைவரான மதிப்பிற்குரிய எலியட் கொல்பேர்ண் (Hon. Elliot Colburn MP) அவர்களின் உதவியுடன், BTC மற்றும் TFL அமைப்புக்களால் இந்த முக்கிய பாராளுமன்ற விவாதம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சர்வதேச மனித உரிமைகள் தினமாகிய 10 Dec 2023 அன்று பிரித்தானியா தனது புதிய தடைப்பட்டியலை அறிவிக்க உள்ள நிலையில் இந்த பாராளுமன்ற விவாதம் மிகமுக்கிய மாற்றத்தை கொண்டுவரக்கூடியது என்றும், இதனால் இந்த அரிய சந்தர்ப்பத்தை ஈழத்தமிழர்கள் தவறவிடக்கூடாது என்றும் ICPPG தெரிவித்துள்ளது.

உங்கள் பிரதேச பாராளுமன்ற உறுப்பினர்களும் இந்த விவாதத்தில் இணைந்து ஆதரவு தரும்படி அவர்களை தொடர்பு கொண்டு வேண்டிக்கொள்ளுமாறு ICPPG அவசர கோரிக்கை விடுத்துள்ளது. உங்கள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அனுப்புவதற்கான மாதிரி கடிதம் கீழே இணைக்கப்பட்டுள்ளது.

https://icppg.org/index.php/2023/12/01/sri-lankan-war-criminals/