தமிழ் மக்களின் விடுதலைக்காக குரல் கொடுத்த சதாவி காலமானார்

664 Views

தமிழினப்படுகொலைக்கு எதிராக குரல் கொடுத்தவரும் எகிப்து நாட்டின் பிரபல பெண்ணிய எழுத்தாளரும் மருத்துவருமாகிய நவல் எல் சதாவி தனது 89 ஆவது வயதில் காலமானார்.

தீவிர மனித உரிமைச் செயற்பாட்டாளரான அவர் ஈழத் தமிழர் இனப்படு கொலை தொடர்பாக 2010 ஆம் ஆண்டு சர்வதேச ரீதியில் நிறுவப்பட்ட முதலாவது மக்கள் நீதி மையத்தில் பங்கெடுத்தவர்.

இலங்கையில் போரின் போதும் போருக்குப் பின்னரும் நடந்த தமிழர் இனப்படுகொலைகளைக் கண்டித்து அவை தொடர்பாக அனைத்துலக மட்டத்தில் விசாரணைகள் நடத்தப்படவேண்டும் என்று வாதாடி வந்தவர்.

அவரின் மறைவுக்கு ஈழத் தமிழர் சார்பாக ஆழ்ந்த அஞ்சலிகளையும் இரங்கல்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

 

Leave a Reply