தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவராகுவதற்கு நான் தயார் – சுமந்திரன் அறிவிப்பு

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமைத்துவத்தை தனக்கு தருவதாயின் தான் அதனை ஏற்கத் தயார் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

சிங்கள தனியார் தொலைக்காட்சிக்கு வழங்கிய செவ்வியொன்றின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

மேலும் மக்களுக்கு சேவை செய்வதே தனது எதிர்பார்ப்பு எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை தான் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாகவும் கட்சியின் தலைமைப் பொறுப்பை இளையவர் ஒருவரிற்கு வழங்குவதாகவம் அண்மையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் எதிர்காலத் தலைவராக மாவை சேனாதிராஜா நியமிக்கப்பட வேண்டும் என வட மாகாண அவைத்தலைவர் சீ.வீ.கே. சிவஞானம் தெரிவித்து வருகின்றமையும் இங்கு குறிப்பிடவேண்டிய விடயமாகும்.

Leave a Reply